International
மலேசியா

18 ஆண்டு காலப் போராட்டம்: பாங்கி தோட்ட மக்களுக்கு வீடுகள்!

செமிஞ்சே, பிப். 20 – குறைந்தது 18 ஆண்டு கால இடைவிடாத போராட்டத்திற்குப் பின்னர், பாங்கி தோட்ட முன்னாள் தொழிலாளர்கள் அடுத்த மாதத்தில் புது வீடுகளைப் பெறுவர்.

2000 ஆம் ஆண்டில் 24 தொழிலாளர்களுக்குத் தோட்டத்தில் அளிக்கப்பட்டு வந்த வேலையை முடக்கி, அவர்களைத் தோட்ட வீடுகளில் இருந்து வெளியேற நிர்வாகம் கேட்டுக் கொண்டது. தொழிலாளர்கள் வெளியேற மறுத்ததால், நிர்வாகம் 2015ஆம் ஆண்டில் அவர்கள் மீது வழக்கைத் தொடர்ந்தது.

அவர்களுக்குப் பக்க பலமாக பிஎஸ்எம் கட்சி உறுதுணையாக இருந்து, வழக்கறிஞர் அம்பிகா ஶ்ரீநிவாசன் வழக்கை நடத்தினார். இறுதியில் கடந்த ஆண்டு ஜனவரிலிருந்து டிசம்பர் வரை தோட்ட நிர்வாகம் தொழிலாளர் குடும்பங்களுக்கு வீட்டு வாடகையாக மாதமொன்றுக்கு ரிம. 650ஐ வழங்கியது.

தோட்டத்திலிருந்து 5 கி.மீட்டர் தூரத்தில் இருக்கும் , தாமான் இம்பியான் புத்ராவில் இருக்கும் 8 மாடி கொண்ட அடுக்ககத்தின் முதலாவது, இரண்டாவது மாடிகளில் தொழிலாளர்கள் இலவசமாக வழங்கப்பட்ட இரண்டு அறைகளைக் கொண்ட வீடுகளைப் பெற்றனர்.

தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட தொழிலாளர்கள், கிடைத்த வேலைகளைச் செய்து வாழ்க்கையை நடத்தினர். அவர்களுக்கு அந்த இலவச வீடுகள் கிடைத்தது ஒரு வரப்பிரசாதமாகவும் இடைவிடாத போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகவும் கருதப்படுகிறது.

The post 18 ஆண்டு காலப் போராட்டம்: பாங்கி தோட்ட மக்களுக்கு வீடுகள்! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!