International
மலேசியா

3 எம்ஆர்டி நிலையங்கள்2 நாள்களுக்கு மூடல்!

கோலாலம்பூர், மார்ச் 7 – சுங்கை பூலோ-காஜாங் எம் ஆர்டி ரயில் சேவை வழங்கும்  3 நிலையங்கள் 2 நாள்களுக்கு தற்காலிகமாக மூடப்படும் என எம்ஆர்டி நிறுவனம் அறிவித்துள்ளது.

குவாசா டாமான்சாரா, கம்போங் செலாமாட் மற்றும் சுங்கை பூலோ ஆகிய நிலையங்கள் மார்ச் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் சீரமைப்புப் பணிகளுக்காக மூடப்பட்டு  11ஆம் தேதி திறக்கப்படும் என அந்நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி அஸ்மி முகமட் ஸின் தெரிவித்தார்.

மேற்கண்ட இரு நாள்களுக்கு குவாசா சென்ட்ரலில் இருந்து சுங்கை பூலோ நிலையத்திற்கு 15 நிமிட இடைவெளியில் இலவச பேருந்து சேவை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

The post 3 எம்ஆர்டி நிலையங்கள்2 நாள்களுக்கு மூடல்! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!