International
மலேசியா

MH17 விமானம்: பேச்சு வார்த்தையில் கலந்துக் கொள்ள ரஷியா முன்வரும்!- நெதர்லாந்து நம்பிக்கை

ஆம்ஸ்டர்டம், பிப்.8- கடந்த 2014-ஆம் ஆண்டில், மலேசிய விமான நிறுவனத்திற்கு சொந்தமான எம்.எச்17 விமானத்தை சுட்டு வீழ்த்தியதன் தொடர்பிலான பேச்சு வார்த்தையில் கலந்துக் கொள்ள ரஷியா கூடிய விரைவில் முன்வரும் என்று நெதர்லாந்து அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஆர்ம்ஸ்டர்டமிலிருந்து கோலாலம்பூருக்கு பயணத்தை மேற்கொண்ட அந்த விமானம் ஏவுகணை கொண்டு சுட்டு வீழ்த்தப்பட்டது. அச்சம்பவம் தொடர்பிலான விசாரணை வாயிலாக ரஷியாவின் விமானப் படையினரால் அவ்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று நெதர்லாந்து அரசாங்கம் தகவல் வெளியிட்டது. மாஸ்கோ அதனை மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

“அச்சம்பவம் தொடர்பில் ரஷியா பொறுப்பேற்க வேண்டும் என்பது குறித்து நாங்கள் ரஷியாவை தொடர்ச்சியாக தொடர்புக் கொண்டு வருகிறோம். கூடிய விரைவில் அந்நாட்டு அரசாங்கம் எங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முன்வரும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று நெதர்லாந்து வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

2014-ஆம் ஆண்டு ஜூலை மாதம், 298 பயணிகளை சுமந்து வானில் பறந்துக் கொண்டிருந்த அந்த விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதில், பயணிகள் அனைவரும் பரிதாபமாக பலியாகினர் .
கடந்தாண்டு மே மாதம், நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய அரசாங்கங்கள்,

அச்சம்பவத்திற்கு ரஷியா பொறுப்பேற்க வேண்டும் என்று அறிவித்தன. அவ்விரு நாடுகளின் அறிவிப்பை தொடர்ந்து, அந்த விமானத்தை ரஷியா சுட்டு வீழ்த்தவில்லை என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

The post MH17 விமானம்: பேச்சு வார்த்தையில் கலந்துக் கொள்ள ரஷியா முன்வரும்!- நெதர்லாந்து நம்பிக்கை appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!