International
இலங்கை

அம்பாறை மாவட்டத்தில் மிகவும் ஆபத்தான உணவு பொருள்களை உண்ணும் பரிதாபகரமாக யானைகள்!

தாவர உண்ணியான காட்டு யானைகள், குப்பைகள், பொலீத்தீன்கள், பிளாஸ்ரிக் பொருட்கள் உள்ளிட்ட கழிவு பொருட்களை உட்கொள்வதனால் யானைகளின் இறப்பு வீதம் அதிகரித்து வருகின்றது.

இலங்கையின் கிழக்கே அம்பாறை மாவட்டத்தில் பெருமளவான காட்டு யானைகள் குப்பை மேடுகளை தேடி உணவுக்காக வருகின்றன.

சம்மாந்துறை, கல்முனை, காரைத்தீவு, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய பகுதிகளில் சேகரிப்படும் குப்பைகளை அஷ்ரப் நகருக்கு அருகில் உள்ள பகுதியில் கொட்டி வருகின்றனர்.

குறித்த குப்பை மேடு உள்ள பகுதிக்கு அதனை அண்டிய காட்டுப்பகுதியில் இருந்து தினமும் சுமார் 40 யானைகள் குப்பைகளை உணவாக உட்கொள்ள வருகின்றன.

முன்னர் குறித்த குப்பை மேட்டினை அண்டிய பகுதியில் யானை பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்த போதிலும், அவற்றை யானைகள் சேதமாக்க்கியுள்ளன.

அதனால் தற்போது யானைகள் எவ்வித தடையுமின்றி குப்பை மேடுகளுக்கு வந்து உணவுகளாக கழிப்பொருட்களை உட்கொள்கின்றன. அங்கே ஆபத்தான பிளாஸ்ரிக் பொருட்கள் உட்பட உடைந்த கண்ணாடி போத்தல்கள் உள்ளிட்ட ஆபத்தான பொருட்களும் காணப்படுகின்றன.

யானை நாளொன்றுக்கு சுமார் 150 கிலோ உணவை உட்கொள்வதாகவும் , 160 லீட்டர் தண்ணீரையும் குடிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!