International
இலங்கை

உயிரிழந்தவர்களிற்கு யாழ் பெரிய கோவிலில் அஞ்சலி!

இலங்கையின் பல பாகங்களிலும் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் பேரனர்த்தங்களையடுத்து, பிரகடனம் செய்யப்பட்டுள்ள தேசிய துக்க நாளான இன்று யாழ்.பெரிய கோவிலில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றது.

அஞ்சலி நிகழ்வின் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் தீபங்களை ஏற்றி அமைதி பிரார்த்தனை செய்ததுடன் ஆலயத்திற்குள் விசேட பிரார்த்தனையும் நடைபெற்றது.

பிரார்த்தனையில் குருமுதல்வர், யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனால்ட், யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, குருமார், பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு உளமார்ந்த அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!