Fri. Jan 15th, 2021

துமிந்த சில்வாவை விடுவிக்கக் கோரும் மகஜரில் கையொப்பமிட்டதால் வந்த எதிர்ப்பில் இருந்து தப்பிக்கவே, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான மகஜர் ஒன்றை தயாரிக்குமாறு தன்னிடம் மனோ கணேசன் கோரியுள்ளார் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

துமிந்தவின் விடுதலைக்கு ஏற்கனவே கையெழுத்திட்டுள்ள மனோ கணேசன், தன்னைத் தற்காத்துக் கொள்ளவே, என்னையும் சுமந்திரன் எம்.பியையும் கோர்த்து விட்டுள்ளார் என்றும், செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார். தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான​ ஏற்பாடுகளைச் செய்யுமாறு, தமிழ் முற்போக்கு் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி, தன்னிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் அதனால், அதற்கான ஏற்பாடுகளைத் தான் செய்வதாக அவரிடம் பதிலளித்திருந்ததாகவும் அவர் கூறினார்.

மரண தண்டனைக் கைதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு கையொப்பம் திரட்டப்பட்ட மகஜரில் தாங்கள் கையொப்பமிட்டுள்ள நிலையிலேயே, தன்னிடம் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான கோரிக்கையை முன்வைத்திருந்தார் என்றும், அடைக்கலநாதன் எம்.பி கூறினார்.

துமிந்த சில்வாவையும் அரசியல் கைதிகளையும் ஒருபோதும் சம்பந்தப்படுத்த முடியாது. அதனால், அரசியல் கைதிகள் விடயத்தில் கவனம் செலுத்துவதாகவே தான் உறுதியளித்ததாகவும், அவர் மேலும் கூறினார்.

share

By Editor

error: Alert: Content is protected !!