International
இலங்கை

கருணாவின் மற்றுமொரு தில்லாலங்கடி வேலை சிக்கியது!

ஏறாவூர் பிரதேச அங்காடி வியாபாரிகளின் பிரச்சனைகள் மற்றும் அவர்களது தொழில் உறுதிப்பாடு , பாதுகாப்பு , பிரதேசத்தின் சகவாழ்வு தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா அவர்களுக்கும் கிரான் பிரதேச இந்து ஆலயங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்று வந்த தொடர் சந்திப்புக்களின் ஒரு அங்கமாக விசேட சந்திப்பொன்று நேற்று காலை இராஜாங்க அமைச்சரின் ஏறாவூர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இதன்போது ஏறாவூர் நகர முதல்வர் வாஸித் ,மற்றும் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியோக மற்றும் இணைப்பு செயலாளர்கள், கிரான் , களுவன்கேனி ஆலயங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று இருந்தனர்.

குறித்த பிரதேசங்களில் வாராந்த பொதுச்சந்தை வர்த்தகத்தை ஒழுங்குபடுத்தும் ஆலய நிர்வாகிகளுக்கும் ஏறாவூர் பிரதேச அங்காடி வியாபாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று கடந்த இரு வாரங்களுக்கு முன் இராஜாங்க அமைச்சரின் ஏறாவூர் அலுவலகத்தில் ஏறாவூர் பற்று தவிசாளர் நா. கதிரவேல் அவர்களின் பிரசன்னத்துடன் இடம்பெற்றிருந்ததுடன் அதன்போது கோரப்பட்ட அவகாசம் மற்றும் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதும் அதில் காணப்படும் சவால்களை நிவர்த்தித்து இன்று ஞாயிற்றுக்கிழமை வழமை போல் சந்தை நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுத்து பொதுமக்கள் மத்தியில் சகஜ வாழ்வினை தோற்றுவிப்பது பற்றியும் இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

கருணாவின் இரட்டை வேடம்

இது மக்களினுடைய வாழ்வாதார விடயம் இது நல்ல காரியம் அங்காடி வியாபாரிகளின் எதிர் காலம் தொடர்பான கலந்துரையாடல்..

கருணாவின் பிறந்த ஊர் அப்பகுதி மக்கள் வெளியிடத்தவர்கள் அங்காடி வியாபாரிகளாக வருவதை முழுமையாக வருவதை விரும்பவில்லை என பொதுவாக கடந்த காலங்களில் அறிவித்திருந்தனர் அதை பலரும் ஏற்றுக் கொண்டனர்.

அதற்கும் அப்பால் கருணா வெளிப்படையாக முஸ்லீம் அங்காடி வியாபாரிகளிற்கு எதிராகவும் அவர்கள் வருகையை அனுமதிக்க மாட்டேன் என பட்டப்பகலில் கூறித்திரியும் நிலையில் திருட்டுத்தனமாக அவரின் மிக நெருங்கிய சகாவும் கிரான் ஆலயத்தின் முக்கிய பொறுப்பில் இருப்பவரும் சென்று சந்திதத்தன் சூட்சுமம் என்ன…

இன்று தமிழர் நடுத் தெருவில் நிற்பதற்கும் தமிழர் இத்தனை அவமானப்படுவதற்கு கருணா தமிழர்களின் போராட்டத்திற்கு செய்த துரோகத்தை யாரும் மறக்கமாட்டார்கள் அலி ஸாஹிர் மௌலானாவுடன் சேர்ந்து.

விடுதலைப்புலிகள் பிரிவை மிக கட்சிதமாக செயற்படுத்தியதில் அலி ஸாஹிர் மௌலானா மிக முக்கியமானர் இதனை அலி ஸாஹிர் மௌலானாவோ.. அல்லது கருணாவோ.. மறுக்க முடியுமா..

இது பழைய வரலாறு இது யாவருக்கும் தெரிந்த விடயம்.. இங்கு அது அல்ல விடயம் முஸ்லீம் மக்கள் வியாபாராம் செய்ய வேண்டும் வாழ்வாதாரத்தை பார்க்க வேண்டும் என்பதல்ல சிக்கல்..

முஸ்லிம் மக்களிற்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்களிற்கும் முழுமையான எதிரி போல் காட்டிக் கொள்ளும் கருணா தன் சகாக்களை அனுப்பி மாமா வேலை பார்ப்பது சரியா..

ஆளுநர் ஹிஸ்புல்லாவை வசை பாடுவதுடன் அண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஆளுநர் ஹிஸ்புல்லாவை சந்தித்ததற்கு கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார் மக்களை ஏமாற்றும் பச்சைத் துரோகம் எனவும் கூறினார் தனது சகா அலி ஸாஹிர் மௌலானாவை சென்று சந்தித்தது மட்டமல்ல அலி ஸாஹிர் மௌலானாவின் மிக அருகில் மிக நெருக்கமாக இருக்கிறார் இது முதல் சந்திப்பல்ல காரணம் அப்படி என்றால் இப்படி நெருக்கமாக இருக்க முடியாது.

இது வழமையான சந்திப்பு இன்றுதான் ஆதாரங்கள் சிக்கியுள்ளது இதற்கு என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார்.. சில வேளை அது தனிப்பட்ட சந்திப்பு ஆலயம் தொடர்பானது என கதையை தலைகீழாக மாற்றக் கூடியவர்…

பாவப்பட்ட மக்களை ஏமாற்றி அலி ஸாஹிர் மௌலானா – அலி ஸாஹிர் மௌலானா போன்றவர்களிடம் அற்ப சலுகைகளுக்காக தமிழ் இனத்தை அடமானம் வைக்கும் கீழ் தரமான வேலைகளை வைவிட வேண்டும் என ஆதங்கப் படும் கிரான் மக்கள்.

தங்கள் அரசியல் நலனுக்காக முஸ்லிம் – தமிழ் மக்களை மோதவிடும் நிலையை மாற்ற வேண்டும் எனவும் கூறுகின்றனர்.

முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் இருந்து சலுகைகளை அனுபவிக்கும் கருணாவும் அவரது சகாக்களும் மானம் – ரோசம் இருந்தால் முஸ்லிம்களிற்கு எதிரான கருத்தை தேசிய வாதிகள் போல் வெளியிடுவதை உடன் நிறுத்தி வெளிப்படையாக நீங்கள் கதைக்கலாம் போகலாம் தமிழ் மக்களின் பெயரால் கீழ்தரமான செயலை செய்ய வேண்டாம் என கிரான் மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!