Tue. Jan 26th, 2021

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த வாரம் சமூக தொற்று உடைய கொரோன நோயாளி
ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும்
பாடசாலைகள் ஒரு வாரம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் பாடசாலைகள் மீளதிறப்பது தொடர்பாகவும் கொரோனா நிலவரம் தொடர்பாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது பாடசாலைகள் மீள திறப்பது தொடர்பாகவும் ஊடகங்களுக்கு கருத்து
தெரிவித்த ரூபவதி கேதீஸ்வரன்-

எதிர்வரும் ஜனவரி மாதம் க.போ.த சாதரண பரீட்சை நடைபெற உள்ள நிலையில்
க.போ.த சாதாரண பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கல்வி
நடவடிக்கைகளை இன்று ஆரம்பிப்பது தொடர்பாக நாம் இன்றைய தினம் கலந்துரையாடி இருந்தோம். கலந்துரையாடலின் அடிப்படையில் பல்வேறு சுகாதார விதிமுறைகளை பின்பற்றி க.போ.த சாதாரண மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை நாளைய தினம் ஆரம்பிக்கும்படி அனைத்து பாடசாலைகளுக்கும் தகவல் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார். அதேவேளை தனியார் வகுப்புகள் எதையும் மீள் அறிவித்தல் வரும் வரை நடாத்த கூடாது என தெரிவித்தார்.

அத்துடன் ஏனைய வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிப்பது தொடர்பாக எதிர்வரும் டிசம்பர் 7 ம் திகதி வரும் PCR பரிசோதனையை தொடர்ந்தே

முடிவு எட்டப்படும் எனவும் தெரிவித்தார்.

share

By Editor

error: Alert: Content is protected !!