International
இலங்கை

கேரளா கஞ்சா கடத்திய நபருக்கு நேர்ந்த கதி

திருகோணமலை சாந்திபுரம் திருமலை நகரிலிருந்து 25மைல் தூரத்திலுள்ள கிராமமாகும் இங்கு சிங்கள, தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

இங்குள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து ஐஸ் வகை போதைப்பொருட்களும், கேரளா கஞ்சா முச்சக்கர வண்டியில் கொண்டு வந்தவேளை ரொட்டாவெவ பகுதியை சேர்ந்த நஸ்லிம்(31) எனும் முஸ்லிம் நபரை மொரவெவ போலிசார் கைதுசெய்துள்ளார்கள்.

இவரை விசாரணை செய்த போது இவர் ஐஸ் எனும் ஒரு வகை போதைப்பொருட்களை பாடசாலை முன்னால் இனிப்பு ஐஸ் பழங்கள், பக்கட் யூஸ் வகைகளில் கலந்து விற்பனை செய்து அவர்களை போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக்கி தமது விற்பனையை அதிகரிப்பதாகும் எனும் அதிர்ச்சி தகவல் வெளியாகியது.

இதேநேரம் இவர் முச்சக்கர வண்டியிலிருந்து கேரள கஞ்சாவும் போலிசாரால் மீட்கப்பட்டு திருகோணமலை மேல் நீதிமன்றில் நிறுத்திய போது 21ம் திகதி வரை விளக்குமறியலில் வைக்கும் படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!