International
இலங்கை

கைப்பேசியில் மூழ்கியிருந்த மனைவிக்கு கணவன் கொடுத்த தண்டனை..!!

குடும்ப பொறுப்புக்களை கவனிக்காமல், எந்த நேரமும் கையடக்கத் தொலைபேசியில் நண்பர்களுடன் அரட்டையடித்துக் கொண்டிருந்த மனைவியின் காது மற்றும் உடலின் பல பாகங்களில் கணவன் கடித்து காயம் ஏற்படுத்திய ‘திகில்’ சம்பவம் இடம்பெற்றுள்ளது.கலேவெல பொலிசாரிடம் இது குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலேவெல பகுதியிலுள்ள இளம் குடும்பப்பெண்ணொருவர் கையடக்க தொலைபேசியில் மூழ்கியிருப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். கையடக்க தொலைபேசியில் சமூக வலைத்தளங்களின் ஊடாக நண்பர்களுடன் அரட்டையடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.குழந்தைகளை கவனிக்காமல் விட்டதுடன், எந்த வீட்டு வேலையிலும் ஈடுபடாமல் இருந்தார். இதனால், அலுவலகம் செல்லும் கணவர், ஹொட்டல்களில் இருந்தே உணவு எடுக்க வேண்டியிருந்தது.மனைவியின் நடவடிக்கையால் அதிருப்தியடைந்த கணவன் அது குறித்து பலமுறை குறிப்பிட்டுள்ளார். ஒருமுறை தொலைபேசியை ஒளித்தும் வைத்துள்ளார். எனினும், மனைவி சச்சரவை ஏற்படுத்தி தொலைபேசியை மீளப் பெற்றிருந்தார்.

இந்த சம்பவத்தின் பின்னரும், தனது நடவடிக்கையை மாற்றம் செய்யாததால் அதிருப்தியடைந்த கணவன், அண்மையில் ஆத்திரம் மேலிட்டு மனைவியின் கையடக்க தொலைபேசியைப் பறித்ததுடன், அவரது காது மற்றும் உடலின் பல பாகங்களிலும் கடித்து காயம் ஏற்படுத்தியுள்ளார்.பாதிக்கப்பட்ட பெண் கலேவெல பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். குழந்தைகளை கருத்தில் கொண்டு, சமரசமாக செல்லும்படி ஆலோசனை வழங்கிய பொலிசார், மருத்துவ அறிக்கை கிடைத்ததும், மத்தியஸ்தர்சபைக்கு இந்த விவகாரத்தை அனுப்ப நடவடிக்கையெடுத்துள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!