International
இலங்கை

செயல்திறனில்லாத அமைச்சுக்களின் விபரம் வெளியானது: செயலாளர்களிற்கு ஜனாதிபதி எச்சரிக்கை!

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களிற்காக அமைச்சுக்களின் செயற்பாட்டு அறிக்கையில் மோசமான பெறுபேற்றை பெற்ற அமைச்சுக்களின் செயலாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதில், அடுத்த வடக்கு மாகாண முதலமைச்சர் கனவில் உள்ள சிவஞானசோதியை செயலாளராக கொண்ட, தேசிய கொள்கைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சும் உள்ளடங்குகின்றது.

இதுதவிர, பாதுகாப்பு, சக்தி மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல முக்கிய அமைச்சகங்கள் இந்த ஆண்டின் முதல் அரையாண்டில் போதுமான முன்னேற்றத்தை பதிவு செய்யவில்லை.

அமைச்சுகக்களின் முதல் அரையாண்டு செயற்பாட்டு அறிக்கையினடிப்படையில், ஜனாதிபதி செயலகத்என்று ஜனாதிபதி செயலகத்தால் அமைச்சுக்களின் செயற்பாட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி வேலை செய்யும் அமைச்சுக்களும், தூங்கும் அமைச்சுக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தூங்கும் அமைச்சின் செயலாளர்களிற்கு ஜனாதிபதியின் அறிவுறுத்தலில், ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரத்ன கடிதம் எழுதியுள்ளார். அவர்களின் மோசமான செயல்திறனை சுட்டிக்காட்டி, அபிவிருத்திப் பணிகளை முடுக்கிவிடுமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

செயற்றிறன் அறிக்கையின் அடிப்படையில், பல அமைச்சுக்கள் 25 சதவீத முன்னேற்றத்தைக்கூட அடையவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

அமைச்சுக்களும், அவற்றின் முன்னேற்ற சதவீதங்களும்:

புத்த சாசன மற்றும் தென்மாகாண அபிவிருத்தி (7 சதவீதம்), சக்தி மற்றும் ஆற்றல் (8 சதவீதம்), தேசிய ஒருங்கிணைப்பு (13 சதவீதம்), தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் (14 சதவீதம்), பொருளாதார சீர்திருத்தங்கள் (அமைச்சரவை அல்லாத – 14 சதவீதம்), விளையாட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொலைத் தொடர்பு (17 சதவீதம்), கல்வி (20 சதவீதம்), மலை நாடு, புதிய கிராமங்கள், உள்கட்டமைப்பு மற்றும் சமூக மேம்பாடு (21 சதவீதம்) மற்றும் பாதுகாப்பு அமைச்சு (23 சதவீதம்).

உயர் செயல்திறன் கொண்ட அமைச்சகங்கள் குறித்தும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மிகச் சிறப்பாக செயல்படும் அமைச்சாக நெடுஞ்சாலை மற்றும் பெட்ரோலிய அமைச்சு (101 சதவீதம்) குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ள மற்ற அமைச்சுகள்: தொழிலாளர் (89 சதவீதம்), நிலங்கள் மற்றும் நாடாளுமன்ற சீர்திருத்தங்கள் (82 சதவீதம்), நீதி மற்றும் சிறை சீர்திருத்தங்கள் (62 சதவீதம்), வீட்டுவசதி (56 சதவீதம்), பெருநகர, மேல்மாகாண அபிவிருத்தி (49 சதவீதம்), விவசாயம் (48) சதவீதம்) மற்றும் ஊடகம் (அமைச்சரவை அல்லாத – 48 சதவீதம்).

நிதி அமைச்சு, வெளியுறவு அமைச்சு தங்கள் முன்னேற்ற அறிக்கைகளை மறுஆய்வுக்கு சமர்ப்பிக்கவில்லை.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!