International
இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் தனித்து களமிறங்குகிறது சுதந்திரக்கட்சி!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி போட்டியிடுமென அக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரால் இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஊடக பேச்சாளரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுதந்திரக்கட்சி சார்பில் களமிறங்கவுள்ள வேட்பாளர் தொடர்பான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

அத்துடன் மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவுடன் கூட்டு சேர்வது தொடர்பாக பேச்சு நடத்திவரும் நிலையிலேயே சுதந்திரக்கட்சியின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!