Sun. Nov 29th, 2020

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தொன்றில் 16 வயதுடைய சிறுவன் கம்பியில் சிக்குண்டு கழுத்தறுபட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை- மட்டக்களப்பு பிரதான வீதி உப்பாறு இராணுவ முகாமிற்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை மாலை குறித்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உயிரிழந்த 16 வயதுடைய சிறுவன் கிண்ணியா – வான் எல பகுதியைச் சேர்ந்த சுக்கூர் றயான் என தெரியவருகின்றது.

மேலும், குறித்த இளைஞர் சக நண்பருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்து இராணுவ முகாமுக்கு முன்னால் போடப்பட்டிருந்த கம்பியில் சிக்குண்டு கழுத்து வெட்டப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

தற்போது, குறித்த சிறுவனின் சடலம் கிண்ணியா தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

share

By Editor

error: Alert: Content is protected !!