International
இலங்கை

தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சாதாரண சிகிச்சை அறைக்கு மாற்றம்!

பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று பகல் சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

ராஜித சேனாரத்ன இருதய சிகிச்சைகளுக்காக நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் சர்ச்சைக்குரிய வெள்ளை வான் கடத்தல், கொலை, தங்கக் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றங்கள் தொடர்பில் தகவல் வெளிப்படுத்திய விவகாரத்தில் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டு அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

ராஜித சேனாரத்ன தனியார் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த போதே அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இன்று பகல் அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!