International
இலங்கை

தேர்தலில் கோட்டாவை முன்னிலைப்படுத்த நிதி அளிக்கிறது சீனா?

பொதுஜனபெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளாக நிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை முன்னிலைப்படுத்துவதற்கு சீனா நிதிஉதவி அளித்துள்ளதா என்பது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என கோட்டாவின் ஊடகப்பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கோட்டாபயவுக்காக தற்போது நடத்தப்பட்டுவரும் பெரியளவிலான பிரசாரத்துக்காக சீனா நிதி அளித்துள்ளது என வெளிவரும் ஊகங்கள் தொடர்பில் கெஹலியவிடம் கேட்கப்பட்டபோதே, சீனா இதில் சம்பந்தப்பட்டுள்ளதா என தனக்குத் தெரியாது என தெரிவித்தார்.

எனினும் வர்த்தகசமுகம், ஏனைய தொழில் புரிவோரும் அரசாங்கத்தை மாற்றுவதற்காக கோட்டாபயவுக்கு தமது ஆதரவை அளிப்பதாக தெரிவித்தார்.

பல தொழிலதிபர்கள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தங்கள் ஆசீர்வாதங்களை வழங்கியுள்ளனர்” என்றும் ரம்புக்வெல்ல கூறினார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சி அதிகாரத்தில் இருந்தவேளை இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு மிகவும் நெருக்கமாக இருந்தது. இதனால் பல திட்டங்களுக்கு சீனா நிதியுதவி அளித்தது.

தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கோட்டாபய தேர்தல் பிரசாரத்துக்காக பாரியளவிலான பல கூட்டங்களை நடத்தியுள்ளார் இதற்கு மிகப்பெரும் நிதி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!