International
இலங்கை

நடு வீதியில் அடிதடியில் ஈடுபட்ட இரு பெண்கள்!

கொழும்பின் புறநகர் பகுதியான கம்பஹாவில் இரு பெண்கள் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காணி பிரச்சினை தொடர்பில் அடிதடியில் ஈடுபட்டமை தொடர்பில் இரு பெண்களையும் யக்கமுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரில் ஒருவர் விவாகரத்து பெற்ற இரண்டு பிள்ளைகளின் தாய் எனவும், மற்றவர் அயல் வீட்டு பெண் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

கணவனைவிட்டு பிரிந்துள்ள இந்த பெண் பலவந்தமாக பிடித்துள்ள காணியை, பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேகவரின் தலையீட்டில் பொது காணியாக்கப்பட்டுமையே இந்த மோதலுக்கு காரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் பிள்ளைகள் காணியை சுத்தப்படுத்தி குப்பைகளை அயல் வீட்டு பெண்ணின் காணியில் போட்டமையினால் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன் போது ஒரு பெண் பொலிஸ் நிலையத்திற்கு சென்றமையினால், தனக்கு முன்னால் பொலிஸ் நிலையம் சென்றுவிட்டாயா என கூறி மற்ற பெண் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இந்த மோதல் முற்றி அடிதடியாக மாறியமையினால் இரண்டு பெண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!