Mon. Jan 25th, 2021

தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை கொண்டாடிய தமிழ்த் தேசிய கட்சியின் பொது செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் சற்று முன்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

இந்திய-இலங்கை அரசுகளிடம் நீதிகோரி ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உணவு ஒறுப்பு போராட்டத்தில் உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் 33 ஆவது நினைவு தினத்தை அனுஸ்டிப்பதற்கு நேற்று முந்தினம் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

இந்நிலையில், நேற்று தடையுத்தரவையும் தாண்டி சிவாஜிலிங்கம் நினைவேந்தல் நிகழ்வை மேற்கொண்டிருந்தார்.

மேலும் தியாக தீபம் திலீபனின் நினைவிடம், யாழ் பல்கலைக்கழகம் போன்ற பகுதிகளில் பொலிசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு திலீபனின் நினைவு தினம் தடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை சிவாஜிலிங்கம் அனுஸ்டித்தார். இதானல் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். இதன் காரணமாகவே இன்று நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

share

By Editor

error: Alert: Content is protected !!