International
இலங்கை

பிரதமர் மற்றும் கனிமொழி உள்ளிட்ட இந்திய பிரமுகர்கள் சந்திப்பில் இணக்கம்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழகத்தின் தி.மு.க துணைத் தலைவர் கனிமொழி உட்பட இந்தியாவின் சில முக்கிய அரசில் தலைவர்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர்.

இன்று (வெள்ளிக்கிழமை)  காலை அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண்பதற்கும் இணங்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் இந்தியாவில் இருந்து வருகை தந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொஹிதீன், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கேரள இராஜாங்க அமைச்சர் அப்துல் மஜீத், இந்திய சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மத் அபூபக்கர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் பாத்திமா முஸஃப்பர், முன்னாள் இந்திய சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ்  உட்பட பல்வேறு முக்கியஸ்தர்கள் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, இலங்கை – இந்திய, மீனவர் நெருக்கடி பற்றி இந்திய நாடாளுமன்ற குழுவினருக்கும், இலங்கை பிரதிநிதிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை விவசாய அமைச்சில் நேற்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை குறித்து இராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது பற்றி இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில், இலங்கை சார்பில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் திலிப் வெத ஆராச்சி, ஆரம்ப கைத்தொழில் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, விவசாய நீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!