International
இலங்கை

மாணவி எடுத்த விபரீத முடிவு! யாழில் நடந்த சோகம்

மன உலைச்சலுக்காளான மாணவியொருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது சகோதரியுடன் சண்டை பிடித்துக் கொண்டதால், அவர் செயலை செய்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி, நவிண்டில் பகுதியில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றது.

18 வயதான மாணவியொருவரே தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீ மூட்டிக் கொண்டுள்ளார்.

உடனடியாக உறவினர்கள் அவரை மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் உடலில் 80 வீதமான எரிகாயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!