International
இலங்கை

மீனவர்களின் இப்படி ஒரு செயல்!

நேற்று மாலை முல்லைத்தீவில் கரையொதுங்கிய புள்ளி சுறாவை அந்த பகுதி மீனவர்கள் பாதுகாப்பாக மீண்டும் கடலுக்குள் விட்டுள்ளனர்.

இது சுமார் 1000 கிலோ நிறையுடையதென உள்ளூர் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆண்டில் இலங்கை கரைக்கு வந்த இரண்டாவது புள்ளி சுறா இதுவாகும். ஏற்கனவே கடந்த யூன் மாதம் நாச்சிக்குடா மீனவர்களின் வலையில் சிக்கிய புள்ளி சுறாவை கரைக்கு கொண்டு வந்திருந்தனர். அந்த சுறா பின்னர் உயிரிழந்தது.

அரியவகை புள்ளி சுறா, மன்னார் வளைகுடா பகுதிகளிலேயே அதிகமாக வசிப்பது குறிப்பிடத்தக்கது.

அரியவகை புள்ளி சுறாவை வேட்டையாடுவதும், விற்பனையாவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!