International
இலங்கை

மீளவும் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கின்றன!

அரச மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக இன்று மீண்டும் திறக்கப்படுகின்றன.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் திருத்தப் பணிகள் இடம்பெறும் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடசாலைகளும் இன்று திறக்கப்படுகின்றன.

தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் மதிப்பீட்டு பணிகள் 12 பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொழும்பு றோயல் கல்லூரி, நாலந்தா  வித்தியாலயம், கொழும்பு இந்துக்கல்லூரி, களுத்துறை ஞானோதயா மகா வித்தியாலயம், இரத்திபுரி மிஹிந்து கல்லூரி, குருநாகல சென் அன்னேஸ் கல்லூரி, கண்டி கிங்வூம் கல்லூரி, விகாரமகாதேவி பாலிக வித்தியாலயம் கண்டி, விகாரமகாதேவி பாலிக வித்தியாலயம் பதுளை, ஊவா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் மதிப்பீட்டு பணிகள் நடக்கின்றன. இந்த பாடசாலைகள் செப்ரெம்பர் 16ம் திகதி மீள திறக்கப்படும்.

இதேவேளை, இன்று பாடசாலைகள் திறக்கப்படும் போது, பாடசாலை சிற்றுண்டிச்சாலைகளை ஆய்வு செய்ய கல்வியமைச்சர் உத்தரவிட்டுள்ளார். பொதுச்சுகாதார பரிசோதர்கள், கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளடங்கிய 1,500 பேர் கொண்ட குழு நாடாளாவிய ரீதியில் இந்த பணியை செய்யும்.

“பல மாணவர்கள் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பல பாடசாலை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் மாணவர்களுக்கு சுகாதாரமற்ற உணவு மற்றும் செயற்கை குளிர்பானங்களை விற்பனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாணவர்கள் இப்போது நீரிழிவு நோயாளிகள், இதயம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கல்வி அமைச்சகம் 2015 ஆம் ஆண்டில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் இது தொடர்பான வழிமுறைகளை விளக்கி ஒரு சிறப்பு சுற்றறிக்கை அனுப்பியது, ஆனால் பல பாடசாலை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் அந்த சுற்றறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றவில்லை“ என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!