
கேபிள் கம்பங்கள் அகற்றிய விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீதான விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கேபிள் கம்பங்களை யாழ்ப்பாண மாநகர முதல்வர் அகற்றியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனை ஆட்சேபித்துத் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு இன்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போதே யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், குறித்த மனுவை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும் குறித்த சீராய்வு மனுவின் பிரதிவாதிகள் முறையே யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, சட்ட மா அதிபர், மாநகர முதல்வர் இ.ஆனோல்ட், மாநகர ஆணையாளர் ஜே.ஜெயசீலன் ஆகியோருக்கு அறிவித்தல் அனுப்ப நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
