International
இலங்கை

யாழில் வைத்து தமிழ் மக்களுக்கு ரணில் தெரிவித்த உறுதி!

எமது நாட்டின் கலாச்சார வரலாற்றில் யாழ்ப்பாணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசம் எனவும், நல்லூர் நகரமே தமிழ் மக்களுக்கு கேந்திர பிரதேசமாக இருக்கின்றது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண நகர மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

வடக்கிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கி அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்ற அதே நேரத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வை காண்பதற்கான முயற்சிகளையும் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறோம்.

எமது நாட்டின் கலாச்சாரத்தைப பொறுத்தமட்டில் யாழ்ப்பாணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பூமியாக இருக்கின்றது. நல்லூர் நகரம் தான் தமிழ் மக்களின் கேந்திர பிரதேசமாக இருக்கின்றது.

ஆகவே அந்த மாளிகையில் சிதைவடைந்த பகுதிகளை நாங்கள் இப்பொழுதும் காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே அமைச்சர் தயாரித்து சமர்ப்பித்துள்ள திட்டத்தின் படி கட்டாயமாக நாங்கள் இந்த மாநகரத்தை கட்டியெழுப்புவோம் என உறுதியாக கூறியுள்ளார்.

மேலும் இத்தகைய அபவிருத்திகளுக்கு இந்திய அரசாங்கம் வழங்கிய நிதி நன்கொடைக்கும் நன்றி கூற வேண்டும். அடுத்ததாக கலாசார மத்திய நிலையத்தை அமைக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறுகிறேன். அதே சந்தர்ப்பத்தில் இந்த நகர மண்டபத்தை நாங்கள் கட்டாயமாக கட்டியெழுப்புவோம் என்று தெரிவித்தார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!