சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டுவில் பகுதியில் இளம் யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
மட்டுவில் கிழக்கு தேவாலய பகுதியை சேர்ந்த தர்மகுலராசா மாருதி (22) என்ற யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (21) பெற்றோர் வேலைக்காக வெளியில் சென்றிருந்த வேளை வீட்டு சுவாமி அறைக்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
ஒரு தற்கொலையின் மூலம் குடும்ப உறுப்பினர்கள் தீராத துயரத்திற்கு உள்ளாகிறார்கள். தற்கொலை எண்ணமுடையவர்கள் ஆலோசனை இலக்கங்கங்களை தொடர்பு கொள்வதன் மூலம் தீர்வை பெற்றுக்கொள்ள முடியும்.
குறித்த யுவதி துாக்கில் தொங்கியமைக்கு காதல் தோல்வியே காரணமாக இருக்கலாம் என யுவதியின் நண்பிகள் தகவல்கள் தெரிவித்துள்ளார்கள்.