International
இலங்கை

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இளைஞன்

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.

மல்லாகம் சந்திக்கு அண்மையில் பாரவூர்தியும், உந்துருளியும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்தது.

மாலை 6.30 மணியளவில் நடந்த இந்த விபத்தில் அளவெட்டி வடக்கை சேர்ந்த சௌந்தர்ராஜன் விதுசன் (19) என்ற இளைஞனே உயிரிழந்தார்.

பாரவூர்தியின் பின்னால் பயணித்துக் கொண்டிருந்த இளைஞன், அதை முந்திச் செல்ல முயன்றுள்ளார். எதிர்ப்பக்கம் வாகனமொன்று வருவதை அவதானித்து, சடுதியாக உந்துருளியை திருப்ப முற்பட்டபோது , பாரவூர்தியில் மோதி விபத்திற்குள்ளானார்.

விபத்தில் காயமடைந்த இளைஞனை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும், அவர் உயிரிழந்து விட்டார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!