International
இலங்கை

ரணில் அமைச்சரவையில் இருந்த காலப்பகுதியில் ஐ.தே.க வினரால் யாழ் பொது நூலகம் எரித்து அழித்தனர் .சுமந்திரன் அவர்களுக்கு முன்னலையில் தெரிவித்தார்

தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் ஏனைய இரு அமைச்சர்களின் வழிகாட்டலில் யாழ்ப்பாண பொது நூலகம் ஒரே இரவில் எரித்து அழிக்கப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகர சபை கட்டடத்துக்கு இன்றையதினம் அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் வைத்தே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்

இன்றையதினம் யாழ்.நகருக்கு ஒரு சரித்திரம் முக்கியத்துவம் மிக்கநாளாகும்.இந்த கட்டடம் எப்படி அழிந்தது என்பது வரலாற்று முக்கியத்துவம் மிக்க விடயம். இந்த நகரசபை மண்டபம் கோட்டையிலிருந்த இராணுவத்தினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலால் அழிக்கப்பட்டது.இவ்வாறு அழிக்கப்பட்ட இந்த கட்டடத்தை மீள கட்டியெழுப்ப பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அமைச்சர் ரணவக்கவும் நேரடியாக வந்து அடிக்கல் நாட்டி வைப்பதென்பது யாழ்.வாழ் மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் மட்டுமல்ல நாட்டில் வாழும் அனைவருக்கும் கொடுக்கப்படும் முக்கிய செய்தி.

அந்த செய்தி என்னவென்றால் அது போன்ற நிகழ்வு இனி நிகழாது.நாங்களாகவே இதனை எங்களுடைய கைகளாலேயே கட்டுகிறோம் என்பதாகும். இது நிகழாமல் இருப்பதாக இருந்தால் தொடர்ந்து இந்த நாட்டிலே ஒரு அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படவேண்டும்.வெறுமனே பௌதீக அபிவிருத்தி அதனை உறுதிப்படுத்தாது.அதற்கான முன்னெடுப்புக்களுபம் பல செய்யப்பட்டிருக்கின்றன.இறுதி செய்யப்படவில்லை.ஆனால் கைவிடப்படாமல் தொடர்ந்து அவை நடத்தப்படவேண்டும். தொடர்ந்து இந்த நாட்டின் மக்களாக இந்த நாட்டினுடைய படையினராலேயே கொன்று குவிக்கப்படாதவர்களாக எங்களுடைய சொத்துக்கள் சேதப்படுத்தப்படாதவர்களாக நாங்கள் தலைநிமிர்ந்து வாழ்வதற்கான அரசியல் அத்திவாரம் போடப்படவேண்டுமென்பது இந்த முக்கியத்துவம் மிக்க நாளிலே ஒரு அரசியல் பிரதிநிதி என்ற வகையில் நான் சொல்லிவைக்க வேண்டியது எனது கடமையாக இருக்கிறது.

யாழ்ப்பாணம் தமிழ் மக்களின் கலாசாரத்திலே எவ்வளவு முக்கியத்துவமானது என்பதை பிரதமர் நன்கு அறிவார்.எனவே இந்தப்பகுதிகளின் அபிவிருத்திப் பணிகளுக்கு அவர் விசேட முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை நான் மெச்சவேண்டும். அதற்கு நன்றி செலுத்தவேண்டும்.

நாங்கள் இந்த முயற்சிகள் அனைத்துக்கும் எங்களது முழுமையான ஆதரவை கொடுப்போம். கடந்த நான்கரை ஆண்டுகளில் என்ன நடந்தது ஒன்றும் நடக்கவில்லை என்று சொல்பவர்களுக்கு இந்த கட்டடங்கள் மட்டுமல்ல இந்த கட்டடங்கள் என்ன செய்தியை சொல்கின்றன இந்த மாற்றங்கள் எப்படியான உண்மையான மாற்றங்களாக பிரதிபலிக்கின்றன என்ற பாடம் எங்களின் மக்களின் மனங்களிலே ஆழமாக பதிகிறது.இன்னமும் நிறைய செய்ய இருக்கிறது.

ஆனால் இந்த ஆரம்பங்கள் மிகவும் சிறப்பாக நடக்கின்ற காரணத்தால் அவற்றுக்கு தலைமைதாங்கி நடத்துகின்ற பிரதமருக்கு மீளவும் எனது நன்றிகளும் வாழ்த்துக்களும் என மேலும் அவர் தெரிவித்தார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!