International
இலங்கை

ரஷ்யாவிடம் இருந்து இராணுவத்தளபாடங்களை கொள்வனவு செய்யவுள்ள இலங்கை!!

இலங்கை ரஷ்யாவிடம் இருந்து இராணுவத்தளபாடங்களை கொள்வனவு செய்யவுள்ளது.

இதற்கான விருப்பப்பட்டியல் ரஸ்யாவிடம் கையளிப்பட்டுள்ளதாக ரஸ்யாவுக்கான இலங்கை தூதுவர் எம்.டி லமாவன்சவை கோடிட்டு ஸ்பூட்னிக் செய்திசேவை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் கொழும்புக்கு விரைவில் புதிய உபகரணங்களை அனுப்பமுடியும் என்று ரஸ்யா எதிர்பார்ப்பதாக ஸ்பூட்னிக் செய்தி சேவை தெரிவித்துள்ளது.

மிகக் குறுகிய காலத்திற்குள் சில இராணுவத்தளபாடங்களை பெற்றுக்கொள்ளும் திட்டம் உள்ளது.

ஏற்கனவே செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையும் தற்போது நடைமுறையில் உள்ளது.

அது முடிந்ததும், ஒரு புதிய ஒப்பந்தம் விவாதிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று லமாவன்ச குறிப்பிட்டுள்ளார்.

பல ஆண்டுகளாக ரஷ்யா இலங்கைக்கு வழங்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் உபகரணங்கள் இலங்கைக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்தநிலையில் நாட்டில் ஐக்கிய நாடுகளின் அமைதிப் பணிகளின் நடவடிக்கைகளை செயற்படுத்த இலங்கைக்கு முக்கியமாக உபகரணங்கள் தேவை என்று தூதுவர் லமாவன்ச தெரிவித்துள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!