International
இலங்கை

வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது இருந்த நபருக்கு விளக்கமறியலில் நீடிப்பு

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சா வழக்குடன் தொடர்புடைய ஒருவர் வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காத நிலையில் இம்மாதம் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எம்.முஹித் இன்று உத்தரவிட்டாடுள்ளார்.

ஆணைச்சேனை, மூதூர் பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கடந்த வருடம் அரை கிலோ கேரளா கஞ்சா வைத்திருந்தமை தொடர்பான வழக்கு திருகோணமலை நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் வழக்குத் தவணைகளுக்கு சமூகமளிக்காது தலைமறைவாக இருந்த நிலையிலே கிண்ணியா பொலிஸார் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!