International
இலங்கை

வாழைச்சேனை பிரதேசத்தில் காட்டு யானையால் தாக்கப்பட்ட மீனவர் ஒருவர்! பரிதாபமாக பலியானார் !

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள குடாமுனைக்கல் பிரதேசத்தில் காட்டு யானையால் தாக்கப்பட்ட மீனவர் ஒருவர் பரிதாபமாக பலியாகியுள்ளார்.

குடாமுனைக்கல் கிராமத்தைச் சேர்ந்த 59 வயதான சீனித்தம்பி கனகசூரியம் என்கின்ற 4 பிள்ளைகளின் தந்தையே காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த மீனவர் அப்பகுதியிலுள்ள குளத்தில் மீன்பிடிப்பதற்காகச் சென்றபோது யானை ஒன்று அவரைத் தாக்கி குளத்தில் வீசியுள்ளது.

இந்த நிலையில் குறித்த மீனவர் மீட்கப்பட்டு கரைசேர்த்தபோது அவர் மூர்ச்சையாகி மயங்கிக் இருந்துள்ளார்.

இதையடுத்து மீனவர் உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படிருந்தார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த மீனவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

வாழைச்சேனை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஹபீப் றிபானின் கட்டளைக்கு அமைய பிரதேச மரண விசாரணை அதிகாரி வடிவேல் ரமேல் ஆனந்தன் உடற்கூறாய்வுப் பரிசோதனையை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்த பின்னர் நேற்று சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!