International
இலங்கை

ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி சென்ற பெண்!

வெவ்வேறு இடங்களில் ஹெரோயின் வைத்திருந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேலியகொடை – நான்காம் கட்டை பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் 20 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற பெண் ஒருவர் கொழும்பு – புதுக்கடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 39 வயதான கொழும்பு 14ஐ சேர்ந்தவர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைதானவரிடம் இருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!