International
மலேசியா

ஜன.22 தொடங்கி 7 UTC மையங்கள் இரவு 10 வரை செயல்படும்!

கோலாலம்பூர்,ஜன.12- பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க நாட்டிலுள்ள 7 இடங்களிலுள்ள UTC-நகர்ப்புற உருமாற்று மையங்கள் ஜனவரி 22-ஆம் தேதி தொடங்கி இரவு 10 மணி வரை இனி செயல்படவுள்ளன.

அந்த UTC மையங்களும் பேரங்காடிகளிள் அமைந்துள்ளவை என நிதி அமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

ஷா ஆலாம், கெராமாட், சிரம்பான், அலோர் ஸ்டாஎ, ஜொகூர் பாரு, கோத்தா பாரு, கோலத்திரங்கானு ஆகிய இடங்களில் உள்ள அம்மையங்கள் வார நாட்களில் இரவு 10 மணி வரையிலும், வாரயிறுதி நாட்களில் மாலை 5 மணி வரையிலும் செயல்படும் என்றார் அவர்.

இந்நிலையில். இவற்றை தவிர்த்து மற்ற UTC மையங்கள் மாலை 5 மணி வரைத்தான் திறக்கப்படும் என நினைவுறுத்தப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் செலவினத்தை குறைப்பதற்காக இந்த நேர மாற்ற முடிவு எடுக்கப்பட்டது. எனினும், பொதுமக்களுக்கு தேவைப்படுமாயின் இந்த நேரமாற்றத்தை அவ்வப்போது தாங்கள் கவனத்தில் கொள்வோம் என்று லிம் குவான் கூறினார்.

The post ஜன.22 தொடங்கி 7 UTC மையங்கள் இரவு 10 வரை செயல்படும்! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!