International
மலேசியா

ஜொகூர்- செரெனா அரண்மனையை வந்தடைந்தார் துன் மகாதீர்!

ஜொகூர் பாரு, ஜன.10- ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் இஸ்கண்டாரைச் சந்திப்பதற்காக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் செரெனா அரண்மனையை வந்தடைந்தார்.

இன்று மாலை மணி 3.57 அளவில் மந்திரி புசார் டத்தோ ஒஸ்மான் சபியானோடு அரசாங்க வாகனத்தில் அவர் அங்குச் சென்றதாக கூறப்படுகிறது.

சுபாங் தேசிய வான்படை விமான நிலையத்தில் இருந்து அவர் பிற்பகல் 2.30 மணிக்கு ஜொகூருக்கு விமானத்தில் பயணமானார்.

14-ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்து மீண்டும் பிரதமராக பதவி ஏற்ற துன் மகாதீர் முதல் முறையாக ஜொகூர் சுல்தானை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஜொகூர்- செரெனா அரண்மனையை வந்தடைந்தார் துன் மகாதீர்! appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!