International
பிரான்ஸ்

ஜோந்தாமினர் மீது மஞ்சள் மேலங்கி போராளிகள் தாக்குதல்! – 14 பேர் கைது!!

ஜோந்தாமினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, ஒரே வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Haute-Marne இல் இக்கைது நடவடிக்கை இடம்பெட்றுள்ளது. மஞ்சள் மேலங்கி போராட்டம் ஆரம்பித்த இரண்டாவது நாளில், (நவம்பர் 19) Haute-Marne பகுதியை ஊடறுக்கு தேசிய நெடுஞ்சாலை N4 வீதியினை ஆர்ப்பாட்டக்காரர்கள் முடக்கியிருந்தனர். இதனால் பெருமளவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு ஜோந்தாமினர் வருகை தந்ததோடு, அவர்களை அப்புறப்படுத்தவும் முயன்றனர்.

அதன் போது இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் மூன்று ஜோந்தாமினர்கள் காயமடைந்திருந்தனர். அதன் பின்னர் விசாரணைகளை ஆரம்பித்த ஜோந்தாமினர், குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று புதன்கிழமை வரை இந்த ஒரு வழக்கின் கீழ் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Perthes மற்றும் Sapignicourt ஆகிய இரு சிறு நகரங்களில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!