Wed. Apr 14th, 2021

தொடர்ச்சியாக  வேலை செய்துகொண்டு வருபவர்கள் வேலையை விட்டு நீங்காமல் 4 முதல் 12 மாதங்களுக்கு  பிரெஞ்சு மொழி படிப்பு (Langue Française) அல்லது தொழில் சார் (Formation Professionnelle) படிப்புகளில் இணையலாம்.

அதாவது வேலை செய்து  வரும் பணியாளர் என்ற அமைப்பு மூலமாக சம்பளத்தோடு படிக்கலாம். இந்த திட்டத்திற்கு  CIF என்று பெயர். இந்த திட்டத்தில் பயன் அடைவதற்கு பிரான்சில் குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் வேலை செய்திருக்கவேண்டும். தற்போது வேலை செய்து வரும் நிறுவனத்தில் குறைந்த பட்சம் ஒரு ஆண்டு வேலை செய்திருக்கவேண்டும் .

செய்யவேண்டியவை : –

  • பாரிஸ் République மெட்ரோ அருகில் கீழே உள்ள முகவரின் அமைந்துள்ள அலுவகத்திற்கு படிக்க விரும்புவதாக தெரிவித்து பதிய வேண்டும். அங்கே உங்களுக்கு படிவம், நீங்கள் படிக்க விரும்பும் படிப்பு சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் முகவரி கொடுப்பார்கள்.
    • முகவரி : Fongecif,  Place Johann Strauss, 75003 Paris
  • நீங்கள் பெற்ற படிவத்தில் மூன்று பகுதிகள் இருக்கும். அவற்றை நிரப்பவேண்டும். முதல் பகுதியில் விண்ணப்பதாரரின் சொந்த தகவல்களை நிரப்பவேண்டும். இரண்டாம் பகுதியை படிக்க போகும்  கல்வி நிறுவனம் நிரப்பவேண்டும் .  மூன்றாம் பகுதியை வேலை நிறுவனம் நிரப்பவேண்டும்.

வேலை நிறுவனம் ஒத்துக்கொண்டால் மட்டுமே படிக்கலாம். வேலை நிறுவனம் முதல் முறை உங்கள் படிப்பு கோரிக்கையை நிராகரிக்கலாம். இரண்டாம் முறை நிராகரிக்க முடியாது.

பிரென்ச் மொழி படிக்க விரும்புவர்கள் கீழ்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளலாம் :

INFORME
9 RUE CARNOT
93000 Bobigny
Tél : 01 48 31 73 52
share

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Alert: Content is protected !!