International
மலேசியா

தடையை மீறி, வீம்புக்காக புகைப் பிடித்து துணையமைச்சரை அவமதித்த நபர்!-(Video)

தைப்பிங், ஜன.13- இங்குள்ள மார்க்கெட்டில் புகைப் பிடிக்கக் கூடாது என்ற எச்சரிக்கை பலகையின் முன் நின்று வீம்புக்காக சிகரெட் பிடித்ததோடு சுகாதாரத்துறை துணையமைச்சரை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட நபர் பற்றிய காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எனினும், மறுநாள் சம்பவம் நடந்த அதே இடத்தில் தாம் அவ்வாறு நடந்து கொண்டதற்காக 67 வயதுடைய அந்த முதியவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

[LIVE] Melawat ke Siang Malam Taiping pagi ini.今早拜访太平大巴刹不夜天茶摊。

Posted by Lee Boon Chye 李文材医生 on Friday, 11 January 2019

இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இருவரில் ஒருவரான முதியவர் சய் சாங் ஃபா என்பவர், புகைப் பிடிக்க விதிக்கப்பட்டிருக்கும் தடையை மீறி, அந்த இடத்தில் வீம்புக்காக புகைபிடித்துக் காட்டிய வீடியோ பலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது.

முதியவர் சய் சாங்கும் மற்றொரு நபரும் சேர்ந்து தைப்பிங் மார்க்கெட்டில் சுகாதாரத்துறை துணையமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் மற்றும் பேரா மாநில ஜசெக தலைவர் ஙா கொர் மிங் ஆகியோரை அவமதிக்கும் வகையில் பேசினர்.

இந்த இருவரில் ஒருவர் தடையை மீறி புகைப் பிடித்ததற்காக தன்னைக் கைது செய்யும் படி அதிகாரிகளிடம் சவால் விடுத்தார். இது தொடர்பான காணொளி சமூக வலைத் தளங்களில் அதிவேகத்தில் பரவி பலரது விமர்சனங்களுக்கு இலக்கானது.

இதனிடையே அதே மார்க்கெட்டிற்கு வருகை புரிந்த முதியவர் சய் சாங் ஃபா, செய்தியாளர்கள் முன்னிலையில் தம்முடைய செயலுக்காக துணையமைச்சரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். அதே வேளையில் அந்த மன்னிப்பைத் தாம் ஏற்றுக் கொள்வதாக துணையமைச்சர் டாக்டர் லீ சாய் பூன் தெரிவித்தார்.

உணவருந்தும் இடங்கலில் புகைப் பிடிக்க விதிக்கப் பட்டிருக்கும் தடை தொடர்பில் சில தரப்புக்கள் குறைகூறி வருகின்றன என்றாலும் அரசாங்கம் குறைகூறல்களை ஏற்றுக் கொள்கிறது. எனினும், யாரும் சட்டத்தை மதிக்காமல் நடந்து கொள்ளக்கூடாது என்று துணையமைச்சர் டாக்டர் லீ சாய் பூன் எச்சரித்தார்.

முதியவர் செய்தியாளர்கள் கூட்டத்தில் மன்னிப்புக் கேட்டுக் கொண்ட சம்பவம், டாக்டர் லீயின் முகநூலில் நேரலை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஙா கொர் மிங்கிடமும் அந்த முதியவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். தான் குடித்து இருந்ததால் தவறாகப் பேசிவிட்டத்தாக அந்த முதியவர் குறிப்பிட்டார்.

The post தடையை மீறி, வீம்புக்காக புகைப் பிடித்து துணையமைச்சரை அவமதித்த நபர்!-(Video) appeared first on Vanakkam Malaysia.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!