International
ஆண்டு பலன் - 2018

தனுசு ராசி 2018 புத்தாண்டு பலன்கள்!

தனுசு ராசியினருக்கு 2018 ம் புத்தாண்டு பலன்கள் இரண்டு வகையாக பிரித்து கூறலாம். ஆண்டின் தொடக்கத்தில் ஜென்ம சனி நடைபெற போகிறது. சனி பகவான் தவறு செய்தவர்களை தான் சோதனை மற்றும் பாடத்தை கற்று கொடுப்பார். எந்த வித தவறு, பாவங்கள் செய்யாதவர்கள் பெரிதும் பாதிப்புகள் ஏற்படாது. இந்த புத்தாண்டு இளைய வயதில் உள்ளவர்களுக்கு ஜென்ம சனி இரு பலன்களை கொடுக்கும். ஆரம்பத்தில் சுறுசுறுப்புடன் இருப்பார்கள் பிற்பகுதியில் சற்று செய்யும் வேலையில் ஆர்வம், விவேகம் குறைய தொடங்கும். ஐம்பது வயதை கடந்தவர்களுக்கு பொங்கு சனியாக இருக்கும் என்பதால் நன்மைகள் நடைபெறும்.

பொதுவான பலன்கள்

தனுசு ராசியினர் 2018ம் வருடம் தன்னம்பிக்கையுடன், உற்சாகத்துடன் செயல் படுவார்கள். தனுசு ராசியில் பிறந்தவர்கள் ஆரம்பத்தில் நற்பலன்கள் கிடைத்து பிற்பகுதியில் கவனத்துடன் செயல் படக்கூடிய வருடமாக இருக்கிறது.  பணத்தின் அருமை உங்களுக்கு தெரிய வேண்டும் என்பதால் சனி பகவான் பண தட்டுப்பாடு,செலவுகள் அதிகமாக இருக்கும். முதல் பகுதியை விட பிற்பகுதியில் உங்களுக்கு பொருளாதாரம் நெருக்கடி வரக்கூடும். எதிலும் அகலக்கால் வைக்காமல் யோசித்த பிறகு முடிவு செய்யுங்கள்.

வாகனத்தில் சிறுது பழுது இருந்தாலும் உடனடியாக சரி செய்து விடுங்கள். வாகனம் ஓட்டும் பொழுது வேகம் தவிர்த்துவிடுங்கள். புதியதாக வண்டி வாங்கும் பொழுது பிள்ளையார் அல்லது இஷ்ட தெய்வத்தை வணங்கிய பிறகு பிரத்யேக ஆராதனை செய்துவிட்டு பயன்படுத்துங்கள்.

பத்திரங்கள் உரிமை மாற்றும் பொழுதும், கையெழுத்து போடும் முன் சரியாக இருக்கிறதா என்று படிச்சு பார்த்து போடுங்கள். பத்திரம் பத்திரமான இடத்தில் வைத்து கொள்ளுங்கள்.

உத்தியோகஸ்தர்கள்

அலுவலகத்தில் உங்கள் திறமை  புலப்படும். மறைமுக எதிரிகள் தோன்ற கூடும் என்பதால் வீண் அரட்டை, வேண்டாதா பேச்சுகளை தவிர்த்திடுங்கள். நேர்மை, திட்டமிட்டு செய்வது, பொறுமை, நிதானம் என்று கடைபிடிக்க வேண்டிய காலம் கட்டமாகும். ஒரு சிலர்க்கு திடீர் வேலை மற்றம் அல்லது வேறு இடத்திற்கு மாற்றலாகி செல்லும் நேரம் வரும். மறுக்கமா ஏற்றுக்கொள்ளுங்கள் அது உங்களுக்கு வாழ்க்கைக்கு மாற்றத்தை கொடுக்கும்.

ராகு பகவான் எட்டாம் இடத்தில் இருப்பதால் வெளிமாநிலம், வெளிநாடு போன்ற இடங்களில் சென்று பணம் ஈட்டுவீர்கள்.வெளிநாடு பயணங்கள் நன்மை தரும். இதுவரை எதிர்பார்த்த நிறுவனத்தில் இருந்து வேலை, படிப்பு போன்றவற்றை அமையும்.

வியாபாரம் / தொழிற்பிரிவினர்

செய்யும் தொழில் சுமாராக இருந்தாலும் வருமானம் சீராக வரும். வாங்கி கடன் வாங்குவது, கடன் கொடுக்கல் வாங்கலை எல்லாம் குறிச்சு வைத்து செலுத்தி விடுங்கள். செய்யும் தொழில் வேலைப்பளு அதிகரிக்கும். யாரையும் நம்பி முழு பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். சுயதொழில் செய்பவர்கள் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதுவும் உங்களுக்கு பொருட்கள் வாங்குவதற்கு முதலீடாக அமையும். வேலை ஆட்கள் உங்களை புரிந்து கொள்ளாமல் வீண் தொல்லைகள் கொடுப்பார்கள்.

பெண்கள்

குலதெய்வம் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தை தரும். வீட்டில் சுபகாரியங்கள் அடுத்துதடுத்து நடைபெறும். அன்றாட பணிகளை உடனடியாக முடித்து விடுங்கள். பிறகு செய்யலாம் என்று இருந்தால் அது உங்களுக்கு பாரமாக முடிந்து விடும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து நல்ல செய்து வரும். வாழ்க்கை துணையிடும் கோபம் கொள்ளாமல் விட்டு கொடுத்து சென்றால் வாழ்க்கை இனிமையாகும். குடும்பத்தில் இருப்பவர்கள், உறவினர்களிடம் உஷ்ணமாக பேசுவதை தவிர்த்திடுங்கள்.

மூன்றாம் நபர் தலையீடு இல்லாமல் பார்த்து கொள்ளுங்க. வீண் சண்டை, பிரச்சனை போன்றவை குடும்பத்தில் மூன்றாம் நபர்களால் ஏற்படக்கூடும். ஒற்றுமையாக இருந்தால் நன்மை நடைபெறும். ஆடை, ஆபரணம், வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவது என்று இருப்பீர்கள்.

மாணவ மாணவிகள்

மூன்றாம் நபரை நம்பாமல் நீங்களே மேல் படிப்புக்கு விண்ணப்பம் செய்யுங்கள். குறிப்பாக வெளியூர் சென்று படிக்க முயற்சி செய்பவர்கள் மூன்றாம் நபரை நம்பாமல் நீங்களே முயற்சி செய்யுங்கள். அன்றன்றைய பாடத்தை அன்றே படித்துவிட்டால் நன்மை உண்டாகும். எதிர்காலம் கருத்தில் கொண்டு இப்பொழுதே அதற்கான படிப்பை தேர்வு செய்து படியுங்கள்.

உடல் நிலை

உடல் நலத்தில் அக்கறை அவசியமாக எடுத்து கொள்ளுங்க. சிறிது உடல் வலி ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். ரத்தம் சம்மந்தமான நோய், அலர்ஜி, தலைவலி வரக்கூடும். அவசரமாக எதுவும் செய்யாதீர்கள். வீண் சந்தேகம், மனம் கஷ்டம் ஏற்பட்டால் தியானம், யோகா செய்து மனதை சாந்த படுத்துங்கள்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!