International
பெண்கள்

திருமணமான பெண்கள் மொட்டைப் போடக் கூடாது! ஏன் தெரியுமா?

ஆண்கள் மொட்டையடித்துக்கொள்வது பெரிய விடயம் கிடையாது ஆனால் சில நேரங்களில் பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பக்தி பரவசத்தால் மொட்டையடித்து கொள்கின்றார்கள்.
546y5e47
இது குறித்து சாஸ்த்திரம் என்ன கூறுகிறது என்றால்.  பொதுவாக பெண்களின் கூந்தலிற்கு இயற்கையாகவே கணவனின் ஆயுளை நீடிக்கும் சக்தி இருக்கிறது.

அதனால் தான் எப்போதும், தலைவாரி பூ வைத்து கூந்தலை வாசனையாகவே வைத்துக்கொள்ள வேண்டும் என்று நம் சான்றோர்கள் கூறியிருக்கிறார்கள். பெண்கள் தங்களின் தலைமுடிக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனரோ அந்த அளவிற்கு அவர்களது திருமண வாழ்கை மகிழ்ச்சியாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ஆகையால் பெண்கள் தங்களது தலைமுடியின் நுனியை காணிக்கையாக கொடுப்பது, மொட்டை அடித்துக்கொள்வது போன்றவற்றை முடிந்தவரை தவிர்ப்பது சிறந்தது. சாஸ்திரங்களும் இந்த செயல்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அனால் திருப்பதி போன்ற புண்ணிய ஸ்தலங்களில் பெண்கள் முடிகாணிக்கை கொடுப்பதோ மொட்டை அடித்துக்கொள்வதோ அவர்களது பக்தி சார்ந்த விடயம். அதில் சாஸ்திரம் எந்த விதத்திலும் தலையிடாது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!