International
ஆண்டு பலன் - 2018

துலாம் ராசி 2018 புத்தாண்டு பலன்கள்!

துலாம் ராசியினர் கெட்டது விலகி தொட்டது துலங்கக் கூடிய நேரம் வந்து விட்டது. இந்த 2018ம் வருடம் மறைந்து இருந்த உங்கள் திறமைகள் புலப்படும். கடந்த சில ஆண்டுகளாக ஏழரை சனி உங்களை படாத படுபடுத்தி  முடக்கி போட்டு இருந்தார். துலாம் ராசியில் பெரும்பாலோனோர் பணியிடம், மணவாழ்க்கை, குடும்பத்தில் மனக்கஷ்டங்கள், தடை, தாமதம் ஏற்பட்டு கொண்டு இருந்தது. இனி படிப்படியாக நன்மைகள் ஏற்படும் வருடமாக அமைகிறது.

பொதுவான பலன்கள்

மூன்றாம் இடத்தில் இருக்கும் சனி பகவான் எதையும் சாதிக்க மற்றும் சந்திக்க தைரியம் கொடுப்பார். வெளியூர் பயணங்கள், வேலை வாய்ப்பு, மேல் படிப்பு எல்லாம் நல்ல விதமாக அமையும்.

கடந்த சில ஆண்டுகளாக வேலை சம்மந்தமாக பல பிரச்சனை , தடை, செய்யும் தொழில் லாபம் குறைவாக அல்லது பணம் சீராக இல்லாத நிலை என்று இருந்தது. ஒரு சிலர்க்கு பணிநீக்கம், பிடித்தமான வேலை அமையாமல் இருந்தது இனி அந்த நிலை மாரி உங்களுக்கு சாதகமான நிலை உருவாகும்.

இனம் புரியாத பயம், அச்சம், தாழ்வுமனப்பான்மை போன்றவை விலகும். இதுவரை தங்களின் வயதுக் கேற்ப பல சோதனைகள் சந்தித்து கொண்டு இருந்த துலாம் ராசியினர் இனி வசந்த காலம் வந்து விட்டது. கிரகம் நிலை சாதகமாக இருப்பதால் முயற்சி செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.சோம்பல், வீண் குழப்பங்கள் விலகி படிப்படியாக நன்மைகள் நடைபெறும் வருடமாக இருக்கிறது.

எது கிடைக்காமல், நடைபெறாமல் இருந்ததோ  அது இந்த ஆண்டு நடைபெற்று விடும். விட முயற்சி செய்யுங்கள் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். எது செய்யலாம், முதலீடு போடலாமா என்று இருந்தவர்கள்  தெளிவான சிந்தனை பிறக்கும்.

உத்தியோகஸ்தர்கள்                          :

அரசு சார்ந்தவர்களுக்கு ஏற்றமான வருடம். அரசியல், பொது துறை, கலைத்துறை இருப்பவர்கள் அடையாளம் தெரியாதவர்கள் கூட நல்ல பெயர், பதவி, புகழ் கிடைக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவு இருக்கும். முப்பது வயது கடந்த துலாம் ராசியினர் ஜீவன அமைப்பு நல்ல படியாக அமையும். நிரந்தரமாக வருமானம் வரக்கூடும்.

ஒரு சிலர்க்கு பணியில் இடைநீக்கம் செய்தவர்களுக்கு மீண்டும் அதே இடத்தில் இருந்து அழைப்பு வரும். ஒரு சிலர்க்கு வேலை விட்டு வேறு மாறலாம் என்ற சிந்தனை இருந்த நிலை மாறும். வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல செய்து வரும்.

வியாபாரம் / தொழிற்பிரிவினர்

புதிதாக முதலீடு, தொழில், வியாபாரம் செய்பவர்கள் விரைவாக செய்யலாம். பொருட்கள், இயந்திரம், வேறு கிளைகள் அமைப்பது என்று இந்த ஆண்டில் செய்யலாம். தொழில், வியாபாரம் இருந்த மந்த நிலை மாரி பணம் சீராக வரும். தயக்கம் இன்றி எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். ஒரு சிலர்க்கு பல விதமான இன்னல்கள், எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் மனசலனத்தை ஏற்படுத்தும். இதுவும் கடந்து போகும் என்பதை போல், ஆண்டின் பிற்பகுதியில் நல்ல முன்னேற்றம் காண முடியும்.

பெண்கள்

துலாம் ராசி பெண்களுக்கு 2018ம் வருடம் சிறப்பாக இருக்கிறது. உங்கள் ரசனைக்கேற்ப நல்ல வாழ்க்கை துணை அமையும். நீண்ட நாட்களுக்கு தடை பட்ட திருமணம், குழந்தை பாக்கியம் கிட்டும். இளம் துலாம் ராசியினர் வீட்டில் பெரியவர்களின் சமந்தத்துடன் திருமணம் செய்து கொள்வீர்கள். நடுத்தர வயதில் இருப்பவர்களுக்கு வாழ்க்கை சீராக அமைந்து விடும். மகன், மகளுக்கு நல்ல இடத்தில் சம்மந்தம் முடிவடையும். பேரன், பேத்திகளை பற்றி நல்ல தகவல் கேட்பீர்கள்.

மாணவ மாணவிகள்

விளையாட்டு, ஓய்வு நேரங்கள், நவீன கருவிகள் அதிகம் பயன்படுத்துவது குறைத்து கொண்டு எதிர்காலத்தை கருத்தில் கொண்டு நல்ல விதமாக பயன் படுத்தி கொள்ளுங்கள். உங்கள் ஆர்வம் பொறுத்தே எல்லாம் நடைபெறும். உங்களின் திறமை, அறிவுத்திறன் கண்டு பாராட்டும் பெறுவீர்கள். ஒரு சிலர்க்கு பயணங்களால் விபத்துகள் நேரிடலாம் என்பதால் எச்சரிக்கையுடன் சாலையில் செல்ல வேண்டும்.

உடல் நிலை

துலாம் ராசியினர் உடல் , மனம் புத்துணர்ச்சி பெரும். முகத்தில் பொலிவு, தெளிவுடன் காணப்படுவீர்கள். இதுவரை உங்களை வாட்டி எடுத்த சோம்பல், மந்தம், சோகம், பயம் எல்லாம் காணாமல் போகும் வருடமாக அமைகிறது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!