போக்கோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
போக்கோ பிராண்டின் புதி எம்3 ஸ்மார்ட்போன் நாளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், புதிய போக்கோ ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
அதன்படி புதிய போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் 6.53 இன்ச் ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படுகிறது. இத்துடன் 48 எம்பி பிரைமரி கேமரா, 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

போக்கோ எம்3 எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
– 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்
– ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்
– அட்ரினோ 610 GPU
– 4 ஜிபி / 6 ஜிபி LPPDDR4x ரேம்
– 64 ஜிபி / 128 ஜிபி (UFS 2.1) மெமரி
– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
– டூயல் சிம்
– ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12
– 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
– அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
– டெப்த் / மேக்ரோ கேமரா
– 8 எம்பி செல்பி கேமரா
– பக்கவாட்டில் கைரேகை சென்சார்
– 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
– ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யுஎஸ்பி டைப் சி
– 6000 எம்ஏஹெச் பேட்டரி
– 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங்
Related Tags :