International
பிரான்ஸ்

நிதி அமைச்சகத்துக்கு வந்த மர்மக்கடிதம்!

நேற்று புதன்கிழமை காலை பரிசில் உள்ள நிதி அமைச்சகத்துக்கு ஒரு மர்மக்கடிதமும், துப்பாக்கி குண்டின் தூளும் வந்துள்ளது.

பரிஸ் Bercy இல் ( 12 ஆம் வட்டாரம்)  உள்ள பொருளாதாரம் மற்றும் நிதி அமைச்சகத்துக்கு நேற்று காலை 8 மணி அளவில் பொதி ஒன்று வந்திருந்தது. அதில் கடிதம் ஒன்றும் மாவு போன்ற ஒரு வஸ்துவும் இருந்துள்ளது. திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பின்னர் அது துப்பாக்கி குண்டின் தூள் என கண்டறியப்பட்டது. கடிதத்தில் ‘அல்லா ஹூ அக்பர்’ என எழுதியிருந்ததாகவும் அறிய முடிகிறது. காவல்துறையினர், தீயணைப்பு படையினர் மற்றும் தொழில்நுட்பவியலாளர்கள் என பலர் தலைமைச் செயலகத்து குவிக்கப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

வரவேற்பு அறையில் இருந்த பொருட்களை வழக்கம் போல் சோதனையிட்ட வரவேற்பாளர்,  இந்த பொதியை கண்டுடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் கடிதத்தை அனுப்பியவரின் விபரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!