International
பிரான்ஸ்

பரிசின் வீதிகளில் 2,000 அகதிகள்! – மீண்டும் முளைக்கும் அகதி முகாம்கள்!!

பரிசுக்குள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகளும், பல அகதி முகாம்களும் உருவாகியுள்ளதாகவும், அவை போதிய சுகாதார நிலையற்று இருபதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக Porte de la Villette பகுதியில் மிக மோசமான சுகாதாரமற்ற நிலையில் இங்கு வசிக்கின்றனர். இவர்களின் சூடானைச் சேர்ந்தவர்கள், எரித்திரியாவைச் சேர்ந்தவர்கள், சோமாலிய அகதிகளும் வசிக்கின்றனர். 100 வரையான தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு அகதிகள் இங்கு தங்கியுள்ளனர். கடந்த ஜூன் மாதத்தில் இப்பகுதியில் இருந்த அனைத்து கூடாரங்களும் அகற்றப்பட்டு, அகதிகள் வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர். ஆனால் டிசம்பர் மாதம் ஆரம்பிப்பதற்குள்ளாக தற்போது மீண்டும் கூடாரங்கள் அமைக்கப்பட்டு அகதிகள் இங்கு வசிக்க ஆரம்பித்துள்ளனர்.

அதேவேளை, Porte de la Chapelle பின்புறம் A1 சாலையை ஒட்டி மீண்டும் அகதிமுகாம்கள் உருவாகியுள்ளன. இப்பிராந்தியத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனையாகின்றது என சமீபத்தில் அதிகாரிகள் இந்த முகாம்களை அப்புறப்படுத்தியிருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். தற்போது 200 கூடாரங்கள் வரை அமைக்கப்பட்டுள்ளது. இவர்களில் பிரதானமாக ஆஃப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அகதிகளே அதிகமாக உள்ளனர்.

இவை தவிர, பரிசுக்கு வெளியே செந்தனியின் Wilson Avenue பகுதியிலும், Porte de Clignancourt பகுதியிலும் 250 க்கும் மேற்பட்ட அகதிகள் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்-து-பிரான்சுக்குள் வதிவிட கோரிக்கையாளர்கள் 45 வீதத்தால் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!