International
பிரான்ஸ்

பரிசை சூறையாடிய மஞ்சள் மேலாடை போராளிகள் 20 பேருக்குச் சிறை!!

டிசம்பர் 1, சனிக்கிழமை பரிசின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்றிருந்த மஞ்சள் மேலாடை போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்ட 20 பேர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டிருந்தாக கைது செய்யப்பட்டவர்களில் 73 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். விசாரணைகளை முடித்துக்கொண்டு, அதில் 20 பேருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மீதமானவர்கள் குற்றப்பணம், நிபந்தனைகளின் பேரில் விடுவிப்பு செய்யப்பட்டதோடு, மேலும் சிலருக்கு தீர்ப்பு ஒத்திவைப்பும் மேற்கொள்ளப்பட்டது.

இவர்களில், 10 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், திங்கட்கிழமையைத் தொடர்ந்து, நேற்று செவ்வாய்க்கிழமையும் விசாரணைகள் தொடர்ந்தன. இன்று புதன்கிழமையும் சிலருக்கு சிறைத்தண்டனை வழங்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!