International
பிரான்ஸ்

பரிஸ் – இளம் திருநங்கை மீது வீதியில் வைத்து தாக்குதல்!!

பரிசில், இம்மாதத்தில் இரண்டாவது தடவையாக இளம் திருநங்கை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை, பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள காவல்நிலையத்துக்கு வந்த திருநங்கை ஒருவர், தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக புகார் அளித்துள்ளார். தாம் திருநங்கை எனும் ஒரு காரணத்துக்காக தாம் தாக்கப்பட்டதாக தெரிவித்தார். முதல் நாள் திங்கட்கிழமை காலை எட்டு மணிக்கு rue Sibuet வீதியில் வைத்து நபர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார். குறித்த திருநங்கை வேலைக்குச் சென்றுகொண்டிருக்கும் போது எதிரே வந்த நபர் ஒருவர் முதலில் தன்னை அவமானப்படுத்தும்படி பேசியதாகவும், அதன் பின்னர் தன்னை அவர் கைகளால் தாக்கியதாகவும் குறித்த திருநங்கை தனது புகாரில் தெரிவித்தார்.

ஒருவழியாக அங்கிருந்து தாம் தப்பிச் சென்றதாகவும், ஆனால், அதன் பின்னர் அதேவட்டாரத்தில் உள்ள rue du Rendez-Vous வீதியில் வைத்து மற்றுமொரு நபராலும் தாக்குதலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளார். விசாரணைகளை 12 ஆம் வட்டார காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!