International
பிரான்ஸ்

பரிஸ் – பயணியின் கால்களுக்கு கீழ் பதுக்கி வைக்கப்பட்டிருந்த €30,000 ரொக்கப்பணம்!!

பரிஸ் பண மோசடி செய்த இரு நபர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்படுள்ளனர். இருவரும் €30,000 ரொக்கப்பணத்தை மகிழுந்துக்குள் வைத்து கடத்தியுள்ளனர்.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள Quai de Bercy பகுதியில் காவல்துறையினர் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்துள்ளனர். அதன் போது சந்தேகத்தின் பேரின் மகிழுந்து ஒன்றை நிறுத்திய காவல்துறையினர் மகிழுந்தை சோதனையிட்டனர். அதன் போது மகிழுந்துக்குள் இருந்த நபர் ஒருவரது கால்களுக்கு கீழ் மறைத்து வைக்கப்பட்ட பொதி ஒன்றில் €30,000 ரொக்கப்பணம் கிடந்துள்ளதை கண்டுபிடித்துள்ளனர்.

பணம் எங்கிருந்து வந்தது என காவல்துறையினர் வினாவியபோது, தனது மாமா அல்ஜீரியாவில் இருந்து அனுப்பியதாக தெரிவித்துள்ளனர். அதைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்ததோடு, மகிழுந்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!