International
பிரான்ஸ்

பரிஸ் : மகிழுந்து தரிப்பிடத்தில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு!!

நாற்பத்து நான்கு வயதுடைய நபர் ஒருவரது சடலம், மகிழுந்து தரிப்பிடம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் உள்ள Quai de la Rapee பகுதியில் இருந்து இந்த சடலம் நேற்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளது. குறித்த உயிரிழந்த நபரை அப்பகுதி நகரவாசிகள் அறிவார்கள் எனவும், அவர் வீடற்றவர் (SDF) எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Rue Vercingetorix வீதியின் முனையில், தொடரூந்து தண்டவாளத்தை ஒட்டியுள்ள தரிப்பிடத்தில் இருந்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மகிழுந்து தரிப்பிடத்தில் குறித்த நபர் கடந்த சில நாட்களாக இருந்ததாகவும், சடலத்தை முதலில் பார்த்து காவல்துறையினருக்கு அழைப்பு எடுத்து தகவல் தெரிவித்த பெண், முந்தைய நாளின் இரவில் குறித்த நபர் அங்கு தங்கியிருந்ததாக தெரிவித்தார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!