International
பிரான்ஸ்

பரிஸ் – வீட்டு ஜன்னலுக்கால் பண்ட பாத்திரங்களை வீசியெறிந்த இளைஞன்!

புதன்கிழமை மாலை பரிசில், இளைஞன் ஒருவன் தனது வீட்டின் ஜன்னலுக்கால் பண்ட பாத்திரங்கள் பலவற்றை வீசியெறிந்துள்ளான்.

சம்பவ இடத்துக்கு காவல்துறையினரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். பரிஸ் 10 ஆம் வட்டாரத்தில், நேற்று புதன்கிழமை மாலை 6.50 மணி அளவில், rue de la Roquette வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞன் ஒருவன், திடீரென தனது வீட்டுக்குள் இருந்த தளபாடங்கள் எல்லாவற்றையும் தூக்கி ஜன்னலுக்கால் வெளியே வீசியுள்ளான். சோஃபா இருக்கைகள், நாற்காலி, சமையல் பாத்திரங்கள், பத்திரிகைகள் உள்ளிட்ட பல பொருட்களை வெளியே வீசியுள்ளான்.

குறித்த இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இளைஞனை உடனடியாக கைது செய்தன. குறித்த இளைஞன் மிகவும் மனநலம் பாதிக்கப்பட்டு, விரக்தியில் இருந்ததாக தெரியவந்ததை அடுத்து, அவனை தீயழ்னைப்பு படையினருடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சம்பவத்தின் போது இளைஞனது தந்தையும் உடன் இருந்துள்ளார். அவரையும் விசாரணைகளுக்காக காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!