International
இந்தியா

போதையில் மருத்துவர்! உயிருக்கு போராடிய நோயாளி!

தஞ்சையில் உள்ள திருவையாறு அரசு ஆஸ்பத்திரியில் பொது மருத்துவராக இருப்பவர் மகபூப் பாட்ஷா. தீபாவளி அன்று இவருக்கு பணி செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.
அன்று இரவு ஆஸ்பத்திரிக்கு வந்த பாட்ஷா, நோயாளிகளை கவனிக்காமல், ஓய்வறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு படுத்துவிட்டதாக கூறுகின்றனர்.
அப்போது விஷம் அருந்தியதாக திருவையாறு ஆஸ்பத்திரிக்கு ஒருவர் வந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவரின் கையெழுத்து அவசியம் என்பதால், செவிலியர்கள் பாட்ஷாவை எழுப்ப முயன்றுள்ளனர்.
அதற்கு, மருத்துவர் பாட்ஷா அவர்களை திட்டி அனுப்பிவிட்டதாக கூறுகின்றனர். அதே போல விபத்தில் காயமடைந்தவருக்கும் சிகிச்சை அளிக்க மருத்துவர் மகபூப் பாஷா எழுந்து வராததால் அந்த நோயாளியும் வேறு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.
பணி நேரத்தில் மது போதையில் படுத்து உறங்கியதாகப் புகார் எழுந்ததால், மருத்துவர் மகபூப் பாஷா மீது துறை ரீதியான விசாரணை நடந்து வரும் நிலையில் அவர் போதையில் பணிக்கு வந்தது உறுதி செய்யப்பட்டதால் அவரை திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!