International
ஆண்டு பலன் - 2018

மகரம் ராசி 2018 புத்தாண்டு பலன்கள்!

மகரம் ராசியினர் 2018ம் வருடம் மாற்றங்கள் தருகின்ற வருடமாக இருக்க போகிறது. ஒரு சிலருக்கு எதிர்மறை பலன்கள்  நடந்தாலும் பிற்காலத்தில் அது உங்களுக்கு நன்மையே உண்டாகும். மகரம் ராசியினர் ஆண்டு தொடக்கத்தில் ஏழரை சனி ஆரம்பம் ஆகின்றது. சனி பகவான் உங்கள் ராசியின் அதிபதியாக இருப்பதால் பெரிதும் பாதிப்புகள் இருக்காது. படபடப்பு, அவசரம், அலட்சியம் தவிர்த்தல் நலன் தரும் ஆண்டாக இருக்கும்.

பொதுவான பலன்கள்

ஒரே இடத்தில் இருந்தால் மாற்றங்கள் நிகழாது என்பதால் கிரகங்கள் பிடரியில் உதைத்து வெளியேற்றும். அந்த சம்பவம் கசப்பானதாக இருந்தாலும், இருண்ட வாழ்க்கை என்று தோன்றினாலும் பிற்காலத்தில் அதன் மூலம் நடந்த நன்மை மகிழ்ச்சி தரும் விதமாக அமையும். வெளிநாடு, வெளிமாநிலம் சென்று வேலை செய்வதற்கு போதிய அளவிற்கு பணம் வரக்கூடும்.

குறிப்பாக முப்பது வயதுகளில் இருப்பவர்கள் செய்யும் முயற்சிகள் தடை மற்றும் அலைக்கழிக்க வைக்க படுவீர்கள். பொருளாதாரம், சிக்கல், பணம் தட்டுப்பாடு, அதிக கட்டுப்படுத்த முடியாத செலவுகள் ஏற்படக்கூடும். பிறந்த ஜாதகத்தில் கிரகங்கள் வலுவாக இருந்தால் மேலே கூறிய பலன்கள் எதுவும் நடைபெறாது.

யாருக்கும் ஜாமீன், சாட்சி கையெழுத்து போடுவது, கியாரண்டி போடாமல் இருப்பது நல்லது. எதிலும் நிதானம், கவனம், எச்சரிக்கையுடன் செயல் பட கூடிய காலம் இது.

உத்தியோகஸ்தர்கள்

செய்யும் வேலை, தொழில் போன்றவற்றில் கடினமாக உழைக்க வேண்டிய சூழல் ஏற்படும். இளம் வயதில் உள்ள மகரம் ராசியினருக்கு ஜீவன அமைப்பு போதிய அளவில் வருமானம் இருக்கும். நடுத்தர வயது அதாவது முப்பது வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு பொங்கு சனி என்றே கூறலாம். அதுவும் ஐம்பது வயது கடந்தவர்கள் எந்தவித பாதிப்புகள் ஏற்படாது என்றே கூறலாம்.

வேலை மாற்றம் நிகழும் என்பதால் இருக்கும் பொழுதே மற்றொன்று உறுதி செய்த பிறகு வேலை விடவும்.

வியாபாரம் / தொழிற்பிரிவினர்

தொழில், வியாபாரம் ரிஸ்க் எடுக்காமல் இருப்பது நல்லது. ஏழரை சனி ஆரம்பிக்கும் பொழுது தான் புதிய தொழில், இயந்திரம் வாங்குவது, தேவையான பொருட்கள் வாங்குவது போன்றவை அமையும். ஒன்பது கிரகங்களில் சனி பகவான் பணத்தின் அருமை பற்றிய பாடத்தை கற்று கொடுப்பார். தொழில் விரிவாக்கம், புதிய கிளைகள் தொடங்குவது, தொழில் மாற்றுவது என்று இருப்பவர்கள் தீர யோசித்து செயல் புரியுங்கள்.

நேர்மையற்ற மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் தவிர்த்திடுங்கள். பங்குசந்தையில் பணம் எண்ணிய படி வருவது கடினமாகும். வியாபாரத்தில் போட்டிகள், பொறாமை அதிகரிக்கும். வேலை ஆட்கள் மற்றும் சக வியாபாரிகளிடம் கவனமாக இருக்க வேண்டிய காலம். யாரையும் எப்பொழுதும் முழு நம்பிக்கையுடன் பொறுப்புகளை கொடுக்காதீர்கள். திருட்டு, விரயம், வீண் செலவு ஏற்படக்கூடும்.  மேலே கூறிய பலன்கள் வைத்து சந்தேக பட்டு கொண்டே இருக்க வேண்டாம். சிறு துரும்பு கூட பல் குத்த உதவும் என்பதால் யாரையும் பகைத்து கொள்ளாமல் சகஜமாக பழகுங்கள்.

பெண்கள்

திருமணம் கைகூட விலை என்று இருப்பவர்களுக்கு அக்டோபர் குரு பெயர்ச்சி பிறகு நல்ல படியாக திருமணம் முடிந்து விடும். குடும்ப வாழ்க்கை சீராக இருந்தாலு அவ்வப்பொழுது சிறு சிறு பிரச்சனைகள் வரக்கூடும். பெரிது படுத்தாமல் விட்டு கொடுத்து சென்றால் வாழ்க்கை நன்மை உண்டாகும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல மகப்பேறு பாக்கியம் கிட்டும். பெண்கள் வீண் பேச்சு, மற்றவர்களின் விஷயத்தில் தலையீடு இல்லாமல் இருப்பது நன்மை தரும்.

மாணவ மாணவிகள்

மாணவர்களுக்கு சோம்பல் விரட்டி விட்டு சுறுசுறுப்புடன் செயல் பாடல் சாதனை படைக்கும் நேரமாகும். ஏற்றம் மாற்றம் நிகழும் காலமாக இருக்கும். பெற்றவர்கள்  பிள்ளைகளை தட்டி கொடுத்து அவர்களின் வழியில் நடப்பது நன்மை தரும். நட்பு வட்டத்தின் மேல் ஒரு கவனம் வையுங்க. உடல் நிலையில் அக்கறையாக இருக்க வேண்டும். அவ்வப்பொழுது உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு படிப்பில் மந்த நிலை உருவாகும்.

உடல் நிலை:

உடல் நலத்தில் எச்சரிக்கையுடன் இருப்பது நன்மை தரும். சிறியதாக ஏதேனும் தெரிந்தாலும் மருத்துவரை அணுகி சரி செய்து கொள்ளுங்கள்.

விஷேச பரிகாரம்: மகரம் ராசியில் பிறந்தவர்கள் பிள்ளையார் வணங்கி எந்த வேலை செய்தாலும் தடங்கல் அகற்றுவர். இந்த ஆண்டு ஒரு முறையாவது பிள்ளையார் பட்டி சென்று கற்பக கணபதியை வணங்கி வழிபடுங்கள். கோவில்களுக்கு விளக்கு ஏற்ற பசு நெய் கொடுக்கலாம். ஏதேனும் கோவில்களுக்கு பச்சரிசி செய்த பிரசாதம் கொடுக்கலாம்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!