International
பிரான்ஸ்

மஞ்சள் மேலங்கி போராட்டம்! – பரிசில் 24 பேர் கைது!!

ஒன்பதாம் வட்டாரத்தில் வெதுப்பகம் எரிவாயு கசிவினால் வெடித்து பெரும் பதட்டம் நிலவிவரும் வேளையில், மறுபக்கம் மஞ்சள் மேலங்கி போராட்டம் இடம்பெற்று மேலும் பரிசை பரபரப்புக்குள் கொண்டுவந்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை நண்பகலை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில், Auxerre பகுதியில் உள்ள Yonne Républicaine பத்திரிகை அலுவலகத்தை மஞ்சள் மேலங்கி போராளிகள் முற்றுகையிட்டனர். அலுவலகத்துக்குள் நுழையும் வாகனங்களுக்கு தடை ஏற்படுத்தியதாகவும், பெட்டகங்களை போட்டு எரியூட்டியதாகவும் பத்திரிகை அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்படுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க, இன்று சனிக்கிழமை காலை 12 ஆம் வட்டாரத்தில் உள்ள Bercy இல் மஞ்சள் மேலங்கி போராளிகள் குவிந்தனர். இவர்கள் Place de la Bastille பகுதியை நோக்கி முன்னேறிக்கொண்டு உள்ளனர் எனவும், இன்று மாலைக்குள் சோம்ப்ஸ்-எலிசேயை இந்த குழு சென்றடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 11 மணி அளவில் பரிசுக்குள் 24 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் Bercy பகுதியில் ஆயுதத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகவும், வன்முறையில் ஈடுபட்டதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

 

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!