International
பிரான்ஸ்

மார்செ கட்டிட இடிபாட்டை தொடர்ந்து Charleville-Mézières நகரில் கட்டிடம் இடிந்து நொருங்கியது!!

புதன்கிழமை இரவு, Charleville-Mézières நகரில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. காயமடைந்தவர்கள் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

தற்போது வரை கிடைக்கப்பெற்ற தகவல்களில், மூன்றடுக்குகள் கொண்ட இந்த கட்டிடம் ஒரு குடியிருப்பு வளாகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு படையினர் தெரிவித்த தகவல்களின் படி, ஏணி மூலம் பெண்மணி ஒருவரை தாம் காப்பாற்றியுள்ளதாக குறிபிட்டனர். இடிபாடுக்குள் பலர் சிக்கிக்கொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

குடியிருப்பு வளாகம் தற்போது கைவிடப்பட்டிருந்தாலும், ஒரு சிலர் அங்கு வசித்ததாக அறிய முடிகிறது. Charleville-Mézières நகருக்கு மத்தியில் உள்ள கட்டிடம் ஒன்றே இவ்வாறு இடிந்து நொருங்கியுள்ளது. மேலதிக தகவல்கள் பின்னர் வெளியாகும்.

share

Most Popular

To Top
error: Alert: Content is protected !!